ஹரிஹரர், புக்கர் எனும் இருவரால் சுவாமி வித்யாரண்யர் அவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டது,தான் வெற்றி நகரம் எனும் பொருள் படும் இந்த விஜய நகரம்,,,,
அந்நிய மிலேச்சர்களின் அடாவடித்தனம்,,,
அட்டூழியம்,,,, கொலைவெறி,,
இவற்றிலிருந்து தென் இந்தியாவைக் காக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட காவல் அரண் தான் விஜய நகரத்தின் வெற்றித் தலை நகரம் ஹம்பி !
இராமாயண காலத்தில் கிக்ஷ்கிந்தா எனும் பகுதியாக இப்பகுதி இருந்தது எனவும் நம்பப்படுகிற பகுதி ! இது,,
ஒரு புறம் என்றும் வற்றாத ஜீவநதியான துங்கபத்ரா நதியும், மூன்று புறம் மலைகளாலும் சூழப்பட்டது, ஹம்பி நகரம் !
ஆம் ! அப்படித்தான் தலைநகரம் இருக்க வேண்டும்,,,! என்றே திட்டமிட்டு அமைக்கப்பட்டது !
என்னதான் வெற்றி நகரமாக அமைத்தாலும்,,, மன்னர் மாளிகை இல்லாமலா ?
அட ! மன்னர் மாளிகை என்றால்,,,, மகாராணிகள் இல்லாமாலா ?
மகாராணிகள் இருந்தால்,,,, அவர்களுக்கான வசந்த மாளிகை இல்லாமலா ?
வெயில் காலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு அஞ்சி நதியிலேயே எத்தனை நேரம் தான் கிடக்க முடியும்,,,,?
கொஞ்சம் குளிராக,,,,
நெஞ்சுக்கு இதமாக,,,,,
ஒரு மாளிகை வேண்டும்,,,! அவர்கள் கேட்காமலேயே கேட்டார்கள் !
எந்த பெண் கேட்டு எந்த ஆண் மறுத்திருக்கிறான் ?
நான் மறுக்க ?
அவர்களுக்காக,,,, எம் பெண்டுகளுக்காக,,, ஹம்பி நகரத்தின் கோட்டைப் பகுதியில் தாமரைமஹால் 24 சதுர தூண்களைக் கொண்ட இரண்டு அடுக்கு மாளிகை,,,, கட்டினேன் !
ஹம்பி கோட்டையில் உள்ள பல பகுதிகள் வெறும் கற்களால் மட்டுமே கட்டப்பட்டிருக்க,,,,
சித்ராகனி மஹால் எனும் இம்மாளிகை மட்டும் கற்களொடு,,,சுண்ணமும், வெண்சாந்துக் கலவையும் கொண்டு விரிந்த தாமரை மலர் வடிவத்திலே கட்டப்பட்டது. அவர்களுக்காக,,,,,,
இம்மாளிகையினை சுற்றிலும்,,, நெடிதுயர்ந்த காவல் கோட்டங்களும் அமைத்தேன் !
ஒன்றிற்கு மேல் கட்டியவன் காவலுக்கும் கெட்டிக்காரனாக இருக்கவேண்டுமே ?
ஒவ்வொரு தூணின் உட்பகுதியில் குவிந்த கூம்பு போன்ற பகுதியின் உட்பகுதியில்,,, எல்லாம் சிறு சிறு துவாரங்கள் போல அமைத்து,,,
அந்த துவாரங்களையெல்லாம்,,இரண்டாம் அடுக்கு மாளிகையின் உச்சியில் ஒன்றிணைக்கப்பட்டு,,,,,
ஒன்றிணைக்கப்பட்ட உச்சியிலிருந்து இறைக்கப்பட்ட ,
கிணற்று நீரினை ஊற்றுகையில்,,,,,
சுவற்றின் உட்கூடுகள் எல்லாம் குளிர்ந்து,,,,
என் மனங்கவர் ராணி சின்னாதேவி என்கிற பேரழகி சென்னாதேவியார் தினந்தோறும்,,,,
சாரல் மழையெனப் பூந்தூறல் தூவும்,,,தூவலில் நெகிழ்ந்திருக்க ,,,,
அதை கண்டு நான் மகிழ்ந்திருக்க,,,,,
முதல் தளத்தில் வெட்ட வெளிதனில் வீசும் தென்றல்,,,,!
இரண்டாம் தளத்தில்,,,,
சின்ன சின்னதாய்,,,
சின்னா தேவிக்கான அறைகள்,,,,
மன்னன் நான் சுகித்திருக்க ?
இந்திய மொகலாயக் கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்ட கமல் மஹால் !
இவையெலாம்,,,
சொன்னால் புரியாது,,,மக்காள்,,,,,,
அனுபவித்தவர்க்கே புரியும்,,,,, ஹாஹாஹா,,,,
ஆம் !
அதுசரி,,,
யார் நீ என்று கேட்கிறீர்களா ?
1509 லிருந்து,,
1529 வரை மட்டுமே ,,,ஆம்,,இருபது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த மனிதன் !
ஒரு சாதாரணன் !
என் பெயர் கிருக்ஷ்ண தேவராயன் !
Hunian Qu Property Syariah Best Marketing Property Syariah, Kavling Syariah, KPR Syariah Hunian Qu Property Syariah
ReplyDeleteThanks for sharing this valuable information. Karpagam Architecture is one of the top
ReplyDeletetop m.plan colleges in india, which is accessible to all kinds of students. With a qualified faculty and a lot of workshops to keep you on your toes, K.Arch will make you the best architect.
Blog was amazing and worth a while.
ReplyDeletestudy in uk for indian students
Thank you for sharing this blog. This is very informative and useful for me. Please share more blogs. Thank you. Education Loan Interest Calculation
ReplyDeleteThis blog is very useful. Keep blogging!!
ReplyDeleteCBSE Schools in Ukkadam Coimbatore
An "Education Poster" serves as a vibrant and informative visual aid, designed to enhance learning and engagement. Featuring key concepts, colorful graphics, and concise information, it supports classroom instruction and stimulates curiosity. These posters are essential tools for reinforcing lessons and inspiring students across various subjects.
ReplyDeleterecruitment agencies in Pakistan for Saudi Arabia